தேன் கூடு நீயானால்
தேனீக்கள் நானாவேன்
கடல் நீராய் நீயானால்
கல் உப்பாய் நானாவேன்
கடுங்குளிர் நீயானால்
கரித்துண்டாய் நானாவேன்
மலைத்தொடர் நீயானால்
மழை சாரல் நானாவேன்
கண் இமையாய் நீயானால்
கண் சிமிட்டல் நானாவேன்
பூமாலை நீயானால்
பூந்தளிர் நானாவேன்
அழகே நீயானால்
அதிர்ஷ்டமே நானாவேன்
முதிர்வாய் நீயானால்
முகவரியாய் நானாவேன்
தொடு வானம் நீயானால்
நெடும் பயணம் நானாவேன்
No comments:
Post a Comment