Wednesday, March 22, 2017

'தண்டனை' செய்வோம்!

கைபேசி மூலம் ஒத்துக் கொண்டு வரும்
இன்பம் இங்கு கொட்டிக்கிடக்கயில்
கைவீசி விளையாடும் மலரை ஏன் கசக்கினாய்?
ஆசை அதிகமாகி...
அதுவே காமமாகி...
அதுவும் இச்சையாகி...
பதம் பார்த்த.. உன்
விரல்களையும்.. உன்
'அந்த'ரங்கத்தையும்
சிறிது சிறிதாக கொய்திட வேண்டும்
வரும் காலங்களில்..
வளர் பிறைகள் அமாவாசையில்
முடிந்திடாமல் இருக்க
இனி
ஒரு
'தண்டனை' செய்வோம்!